இமயமலை பகுதியில் தொடர்ந்து பனிபாறைச்சரிவுகள் மற்றும் கனமழை பெய்து வருவதனால், நேபாளம் மேலும் பல வெள்ளப் பெருக்கினை சந்திக்க நேரிடும் எனவும்,”அதி உயர் வெள்ளப்பெருக்கு” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த புதன்கிழமை(26) அன்று நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 600 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தபட்சம் 2,426 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், தொடர்ந்து பெய்துவரும் மழையானது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை அடைவதற்கு மீட்புக் குழுவினருக்கு இடையூறாக மாறியுள்ளது.
நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் உட்பட, காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் தங்களது அன்புக்குரியவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
திபெத்தின் நிலவரம் குறித்து சீன அரசு ஊடகங்களின் செய்திகளையே எதிர்பார்க்கவேண்டியுள்ளதால், களத்தகவல்களை உடனுக்குடன் பெறமுடியவில்லை என்று செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
