Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக திலக் வர்மாவை அணியில் இணைக்க தேர்வுக்குழு பரிசீலனை

ஆவணி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியின் மத்தியவரிசை துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் நோக்கில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இடதுகை துடுப்பாட்ட வீரரான திலக் வர்மாவை சேர்க்க அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் தீவிரமாக பரிசீலித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் , மத்திய வரிசையில் வலதுகை துடுப்பாட்டக்காரர்கள் மட்டுமே அதிகம் இருப்பதைத் தவிர்க்க, இடதுகை துடுப்பாட்ட வீரரான திலக் வர்மா சரியான தேர்வாக இருப்பார் என நிர்வாகம் கருதுகிறது.

இதேவேளை, ஸ்ரேயாஸ் ஐயர், ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஆகிய மூத்த வீரர்களின் காயம் மற்றும் உடற்தகுதி சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, சுழற்சி முறையில் வாய்ப்பளிக்கக்கூடிய இளம் வீரர்களைத் தயாராக வைக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் செப்டம்பர் இறுதியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் அதற்கு முன்னதாக செப்டம்பர் 13 முதல் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடருக்கான இந்திய குழாம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

2027 ஐசிசி உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய கிரிக்கெட் அணி…

ஆனி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் – ஜப்பான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

ஆடி 28, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் பாரபட்சம் – நாமல் ராஜபக்ஷ !

சித்திரை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை

ஆவணி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube