Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலகம் தர்பூசணி விற்பனைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!

#கிளிநொச்சி#கிளிநொச்சி_மாவட்ட_செயலகம்#மக்கள்_நலச்சேவை#முன்மாதிரி_நிர்வாகம்#தர்பூசணி#வெப்பநிலை#பொதுமக்கள்_நலன் #இலங்கை_செய்திகள் #Kilinochchi#PublicService#SriLankaNews

ஆவணி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையின் சிறந்த நிர்வாகச் செயல்பாடுகளுக்காக ஏனைய மாவட்டங்களுடன் போட்டியிட்டு பல விருதுகளைப் பெற்று முன்னிலையில் திகழும் கிளிநொச்சி மாவட்ட செயலகம், தற்போது மீண்டும் ஒரு முன்மாதிரியான மக்கள் நலச் சேவையை முன்னெடுத்துள்ளது.

தற்போது நிலவி வரும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, பல்வேறு நிர்வாகத் தேவைகளுக்காக மாவட்ட செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் மாவட்ட செயலகம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் தரமான தர்பூசணிப் பழங்கள் விற்பனை செய்யும் விசேட ஏற்பாடு செயலக வளாகத்தில் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகத்தின் இந்த மனிதநேயமிக்க மற்றும் வித்தியாசமான முயற்சிக்கு, அங்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது.

அரச நிர்வாகப் பணிகளோடு மட்டுமல்லாது, பொதுமக்களின் உடனடி அத்தியாவசியத் தேவைகளையும் உணர்ந்து செயல்படுவதில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் தொடர்ந்து ஒரு முன்மாதிரி நிறுவனமாகத் திகழ்கிறது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓட்டமாவடியில் வீட்டு முன் நிறுத்திய மோட்டார் சைக்கிள் திருட்டு

ஆனி 15, 2026
இலங்கை

மே தினம் மற்றும் வெசாக் பண்டிகை நாட்களில் மதுபான சாலைகள் மூடப்படும்!

சித்திரை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்லாம் பொய்… அனுரவின் வாயைப் போல….

ஆனி 30, 2026
இலங்கை

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பரில்!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube