Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் 800 கோடி ரூபாய் ‘ஐஸ்’

#கொழும்பு_துறைமுகம் #ஐஸ்_போதைப்பொருள் #போதைப்பொருள்_கடத்தல் #போதைப்பொருள்_பறிமுதல் #800கோடி #சுங்கத்துறை #இலங்கை_செய்திகள் #ColomboPort #IceDrug #DrugBust #DrugTrafficking #SriLankaNews #BreakingNews

ஆவணி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ வகை போதைப்பொருளின் அளவு சுமார் 463 கிலோகிராம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இதற்கமைய, இதன் மதிப்பு 800 கோடி ரூபாய்க்கும் அதிகம் எனப் பதிவாகியுள்ளது.

 

குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகமும் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளன.

 

இதன்போது சந்தேகத்திற்குரிய இரண்டு கொள்கலன்கள் சோதனையிடப்பட்டுள்ளதுடன், சுங்கப் பிரிவினரின் உதவியுடன் அவை திறக்கப்பட்டுப் போதைப்பொருளின் எடையை அளவிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

அதன்படி, இதுவரை 463 கிலோகிராம் எடை கொண்ட போதைப்பொருள் கணக்கிடப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன தெரிவித்தார்.

 

குறித்த போதைப்பொருள் தொகுதியை நாட்டிற்குள் கொண்டு வந்தது யார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸாரைச் சுட்டு தப்பிய சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவின் பணபரிமாற்றத்தின் போது இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது!

வைகாசி 17, 2026
இந்தியாஉலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

ஒரே ஸூம் அழைப்பில் 900 ஊழியர்களை பணிநீக்கம் செய்த அதிகாரியின் வேலை பறிபோனது

ஆவணி 16, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : இரு மாணவர்கள் உட்பட நால்வர் காயம்!

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube