Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸாரைச் சுட்டு தப்பிய சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது!

ஆடி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் பொலிஸ் அதிகாரியுடன் மோதலில் ஈடுபட்டு, அவரது துப்பாக்கியைப் பறித்து மற்றொரு பொலிஸ் அதிகாரியைச் சுட்டுக் காயப்படுத்திய பின்னர் தப்பிச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல விசேட பொலிஸ் குழுக்கள் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது, திவுலபிட்டிய பகுதியில் நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குறித்த சந்தேகநபரை 31 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து பொலிஸாரிடம் இருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய இவர், 2008 முதல் 2010 வரை சிவில் பாதுகாப்புப் படையின் கட்டுநாயக்க நகரப் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி நீர்கொழும்பு வைத்தியசாலையிலும், தாக்குதலில் காயமடைந்த மற்றொரு பொலிஸ் அதிகாரி மினுவாங்கொட வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காலாவதியான மருந்துகள் மற்றும் உரிம மீறல்களுக்காக மருந்தகங்களுக்கு அபராதம் விதிப்பு!

ஆடி 10, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வடக்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழப்பு

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 14 சீன பிரஜைகள் கைது!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் உயிரிழந்தார்!

ஆடி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube