Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய கனிமக் கொள்கை: ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

#தேசிய_கனிம_கொள்கை #கனிமத்தொழில் #கனிமவள_அபிவிருத்தி #ஜனாதிபதி #இலங்கை_அரசாங்கம் #இலங்கை_பொருளாதாரம் #NationalMineralPolicy #MineralIndustry #MineralResources #SriLankaEconomy

ஆவணி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026 ஆம் ஆண்டு தேசிய கனிமக் கொள்கையின் படி, இந்நாட்டின் கனிமத் தொழிற்துறையை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் தலைமையி

ஏற்றுமதியை முதன்மைப்படுத்திய 2026 ஆம் ஆண்டு தேசிய கனிமக் கொள்கையின் படி, இந்நாட்டின் கனிமத் தொழிற்துறையை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், இலங்கை கனிம மணல் சங்கம் (SLMSA) மற்றும் புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கனிம வளங்களின் ஆராய்ச்சி, அகழ்வு மற்றும் பெறுமதி சேர்ப்பு செயல்முறைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், உள்நாட்டு கனிம வளங்களை தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும், ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் முறையான வகையில் பயன்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

உள்நாட்டு உற்பத்தி தொழிற்துறைகளை வலுப்படுத்துவதற்காக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்குதல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவித்தல் என்பன குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்த்து, இத்துறை சார்ந்த முதலீட்டாளர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவது மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்பது குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெறுவது உட்பட, அரச நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளும்போது முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் மோசடி -அவதானம்

ஆடி 13, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நேபாள வெள்ள பெருக்கில் சிக்கிய ஒருவர் 10 நாட்களுக்கு பின்னர் மீட்பு

புரட்டாதி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலே தாக்கல் செய்த ரீட் மனு மீதான விசாரணை ஜூலை 10!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற வெண்டிஸ் (Wendy’s) உணவகம்

ஆடி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube