Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பாறைகள் சரியும் அபாயம்

#ஹெட்டன் #கொழும்பு_பிரதான_வீதி #பாறைசரிவு #மண்சரிவு #இலங்கை #போக்குவரத்து #மலைப்பகுதி #SriLankaNews

புரட்டாதி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, ரம்பாதெனிய பகுதியில் வீதிக்கு மேலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள சில பெரிய பாறைகளும் மரங்களும் பிரதான வீதியில் சரிந்து விழும் கடும் அபாயம் நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த நாட்களில் கினிகத்தேனை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, குறித்த இடத்திலிருந்து பிரதான வீதிக்கு மண்ணும் பாறைகளும் சரிந்து விழுந்ததில் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.

பின்னர் வீதியில் சரிந்து விழுந்த மண்ணையும் பாறைகளையும் அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதிலும், கீழே சரிந்து விழும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஏனைய பெரிய பாறைகளையும் மரங்களையும் அகற்றுவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கும் இந்த பரபரப்பான வீதியில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக, அச்சுறுத்தலாக உள்ள பாறைகளையும் மரங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு தலையிடுமாறு சம்பந்தப்பட்ட பொறுப்பான அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தளதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுர

ஆவணி 28, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்குமாறு கோரிக்கை

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகள் வயது திருத்தம்: அரசிடம் திருச்சபை கோரிக்கை!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதையல் தோண்டிய மூவர் கைது!

வைகாசி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube