சீனாவில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான பாலங்களில் ஒன்றான பேஜிபான் பாலத்தின் (Beipanjiang Bridge / Duge Bridge) கீழ் 360 டிகிரி முழு வட்ட வடிவிலான வானவில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வானவில் வளைந்த அரை வட்ட வடிவமாகவே நம் கண்களுக்குத் தெரியும்.
எனினும், வளிமண்டலத்தின் மேற்பகுதியில் உயரமான இடங்களில் இருந்து பார்க்கும் போது அது முழு வட்ட வடிவில் உருவாகுவது அறிவியல் ரீதியான உண்மையாகும்.
அந்த வகையில், சீனாவில் உள்ள உயரமான பாலத்தின் கீழ் தோன்றிய இந்த முழு வட்ட வடிவ வானவில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
