Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள்களை திருடி பாதாள உலகக் குழுவுக்கு விற்பனை செய்யும் ‘பொம்புவல சுத்தா’ களுத்துறையில் கைது!

புரட்டாதி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மோட்டார் சைக்கிள்களை திருடி அவற்றை பாதாள உலகக் குழு நடவடிக்கைகளுக்காகவும் போதைப்பொருள் வர்த்தகத்துக்காகவும் மோட்டார் சைக்கிள்களை விநியோகித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் “பொம்புவல சுத்தா களுத்துறை குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகொடை சந்தியிலுள்ள கடை ஒன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடிச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்போது அப்பகுதியிலுள்ள சிசிரிவி கமராக்களை ஆய்வு செய்த பொலிஸார் சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, களுத்துறை குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், பொம்புவல பகுதியில் வைத்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றபோதே சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது நடவடிக்கையின் போது குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகட்டிலுள்ள பதிவு இலக்கங்களை மாற்றும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதனைத்தொடந்து சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், இவர் இங்கிரிய, இரத்தினபுரி மற்றும் கிரியெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களுக்காகப் பாதாள உலகக் குழுக்களுக்கு இவர் வழங்கியிருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும் களுத்துறை குற்றப்பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

கண்டி, மெனிக்ஹின்ன பகுதியில் வியாபார நிலையமொன்றில் தீ விபத்து !

சித்திரை 22, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இந்திய ஏ அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்திய இலங்கை ஏ அணி !

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6 ஆண்டுகளில் 267,138 மாணவர்கள் பாடசாலையிலிருந்து விலகியுள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 30 வருட சிறைத்தண்டனை!

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube