Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெல்லாவெளி பாலையடிவட்டையில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது  சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு

செப்டம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

(கனகராஜா சரவணன்)

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை   உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03) மாலை மட்டு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய 37-ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6ம் ஆண்டில் கல்வி  கற்று வந்த ரொ.சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் வீட்டிற்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்தில் இருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை சம்பவ தினமான நேற்று மாலை எடுத்து உண்டுள்ள நிலையில் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்ததையடுத்து அவரை உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உண்டதால் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட் படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டிட்வா சூறாவளி: வீட்டு வாடகை கொடுப்பனவு நீடிப்பு

செப்டம்பர் 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அவசரகாலத் தேவைகளுக்காக 3 நாட்களுக்குப் போதுமான உணவு, குடிநீரைச் சேமிக்க பிரித்தானியா அறிவுறுத்தல்!

அக்டோபர் 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஆப்பிரிக்காவில் எபோலா பரவல் – பல நாடுகளில் கண்காணிப்பு தீவிரம்

அக்டோபர் 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தாய்லாந்திலிருந்து வந்த மேசைப் பாகங்களில் ரூ.15.8 கோடி போதைப்பொருள்!

அக்டோபர் 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube