Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருகோணமயில் குறைந்த விலையில் நெல்கொள்வனவு – விவசாயிகளுக்கு நஷ்டம்

புரட்டாதி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, கிளிவெட்டி, தோப்பூர், வெருகல், சேருவில உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சிறுபோக அறுவடை இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், கடந்த போகத்தை விட இம்முறை அறுவடை செய்யப்படும் நெல் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்படுவதால் தாம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கல்லாறு மற்றும் கிளிவெட்டி பகுதிகளில் இரண்டு நெல் களஞ்சியசாலைகள் காணப்படுகின்ற போதிலும், அங்கும் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அறுவடை செய்த நெல்லை தனியார் வர்த்தகர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

வேளாண்மைச் செய்கைக்கான செலவுகள் முன்னைய காலங்களை விட அதிகரித்துள்ள நிலையில், அதிக செலவு செய்து பயிர்ச்செய்கை மேற்கொண்ட போதிலும், கடந்த போகத்தை விட இம்முறை குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே விவசாயிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு, நெல்லுக்கான நியாயமான விலையை உறுதி செய்வதுடன், அரசாங்க நெல் களஞ்சியசாலைகள் ஊடாக உடனடியாக நெல் கொள்வனவை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

30,000 ஆசிரியர் நியமனம்!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அப்தெலட்டியை சந்தித்து பேச்சுவார்த்தை

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட 5 பேருக்கு பிணை!

ஆடி 27, 2026

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிணையில் செல்ல அனுமதி

புரட்டாதி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube