Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சவர்க்கார பொருட்களுக்கு புதிய லேபிள் விதிமுறை; நுகர்வோர் அதிகார சபை அறிவிப்பு

ஆடி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான சவர்க்கார பொருட்களுக்கு கட்டாய லேபிள் விதிமுறைகளை அறிமுகப்படுத்தி நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை (CAA) விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவு, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

புதிய விதிமுறைகளின்படி, சவர்க்கார பொருளின் பெயர் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அல்லது குறைந்தது இரண்டு மொழிகளிலாவது பிரதான பொதியில் தெளிவாக இடம்பெற வேண்டும். மூன்றாவது மொழி பொதியின் வேறு பகுதியில் குறிப்பிடப்பட வேண்டும்.

மேலும், சோப்பில் உள்ள மொத்த கொழுப்பு சத்து சதவீதமும் குறைந்தது 2 மில்லிமீட்டர் அளவிலான தடித்த எழுத்துக்களில் கட்டாயமாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

இந்த விதிமுறை குழந்தைகள் சவர்க்காரம், குளியல் சவர்க்காரம், சவரச் சவர்க்காரம், கார்போலிக் சவர்க்காரம், சலவை சவர்க்காரம், குளியல் பார் மற்றும் மென்மையான சவர்க்காரம் உள்ளிட்ட பல்வேறு வகை சவர்க்கார பொருட்களுக்கு பொருந்தும்.

இந்த புதிய வர்த்தமானி விதிமுறைகள் 2027 ஜூலை 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

எங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மலையக காணி உரிமைக்காக கொழும்பு நோக்கி நடக்கும் 7 வயது சிறுவன்!

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாவின் மனு இன்று விசாரணைக்கு!

ஆனி 18, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மத்திய மாகாணத்தில் புதிய சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம்!

ஆனி 10, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தவெக வெற்றிக்கு இளைஞர்களின் எழுச்சிதான் காரணம் – லெஜெண்ட் சரவணன்

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube