Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு

புரட்டாதி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பு, கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அந்த பகுதி மீனவர் சங்க தலைவர் உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் நீந்தி கரை சேர்ந்துள்ள சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (4) பிற்பகலில் இடம்பெற்றுள்ளதாகவும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவரின் சடலம் காணாமல் போயுள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மீனவர் சங்க தலைவரான நகேந்திரன் என அழைக்கப்படும் துரைராஜா முத்தையா , விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய அமரசிங்கம் பரமலிங்கம் என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர்.

குறித்த கடல் பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று பிற்பகல் 11.00 மணியளவில் மீன் பிடிப்பதற்கு தோணி ஒன்றில் 3 பேர் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென பாரிய அலை ஒன்றில் தோணி சிக்கி கவிழ்ந்ததையடுத்து 3 பேரும் நீரில் மூழ்கினர்.

இதில் மீனவரான 45 வயதுடைய செல்வகுமார் நீந்தி கரையை வந்தடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அமரசிங்கம் பரமலிங்கம் என்ற மீனவரின் சடலம் மீட்கப்பட்டதுடன் மீனவர் சங்க தலைவரான நாகேந்திரன் காணாமல் போயுள்ளார். அவரை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள், உறவினர்கள், ஊர் மக்கள் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

இதில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு அதிகரிப்பு

ஆவணி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காத்தான்குடி நகரசபையில் சர்ச்சை-  ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சிகள் அவசர அழைப்பு!

ஆனி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உக்ரைன் பயணிகள் ரயில் மீது ட்ரோன் தாக்குதல் – இருவர் பலி

ஆவணி 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹேக்கர்களால் திருடப்பட்ட 6.6 மில்லியன் டொலர் ஓமானில் மீட்பு

வைகாசி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube