Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காத்தான்குடி நகரசபையில் சர்ச்சை-  ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சிகள் அவசர அழைப்பு!

ஆனி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

காத்தான்குடி நகரசபையின் தற்போதைய செயற்பாடுகளைப் பார்க்கும்போது, காத்தான்குடிக்கு ஜனாதிபதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எல்.எம்.ஏ ஹிஸ்புல்லாவா? அல்லது இந்த நகரசபை இலங்கை நாட்டிற்குள் தான் உள்ளதா? என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு ‘வொய்ஸ் ஒப் மீடியா’வில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில், நகரசபை எதிர்க்கட்சி உறுப்பினர்களான ஏ.எம்.ஏ. பர்சாத் , எம்.எப்.எம். கலீல் பாரி மற்றும் ஜுனைட் முஜீப் ஆகியோர் ஒன்றிணைந்து தவிசாளரின் ஊழல் மற்றும் ஜனநாயக விரோதப் போக்குகளைப் பட்டியலிட்டனர்.

சுற்றுலா அமைச்சினால் வழங்கப்பட்ட 4 மில்லியன் ரூபா பெறுமதியான படகுகள், முறையான அனுமதியோ, நீச்சல் பயிற்சி பெற்ற சாரதிகளோ இன்றி இயக்கப்படுகின்றன. அண்மையில் ஏற்பட்ட படகு விபத்தில் 30 பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர். இதுகுறித்து முகநூலில் பதிவிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக, “நகரசபை வருமானம் குறைந்துவிட்டது” எனக் கூறி தவிசாளர் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

அண்மைய படகுச் சேவை தொடக்க விழாவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல், மண்முனை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கும், புதிய சுற்றுநிருபத்தை மறைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தவிசாளர் அழைப்பு விடுக்கவில்லை.

மத்திய கல்லூரி மைதான விவகாரத்தில், சபை அமர்வில் ஒரு தீர்மானத்திற்கு அனுமதி பெற்றுவிட்டு, உத்தியோகபூர்வ கூட்டறிக்கையில் “மைதான சுவரை உடைத்து வாகன தரிப்பிடம் அமைப்பது” என தவிசாளர் தன்னிச்சையாக மாற்றியுள்ளார்.

20 வருடங்களாக மோசமான நிலையில் உள்ள காத்தான்குடி ஜாமில் உல்லா வீதியைத் தனியார் நிதியுதவியுடன் புனரமைக்கக் கொண்டுவரப்பட்ட பிரேரணையைத் தவிசாளர் நிராகரித்துள்ளார்.

இலங்கை நாட்டிற்கு ஒரு சட்டமும் காத்தான்குடிக்கு ஒரு சட்டமும் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த விவகாரத்தில் ஜனாதிபதியும் உயர் அதிகாரிகளும் உடனடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

கொங்கோ நாட்டவர்களுக்கு கடனாவில் நுழைய தடை!

ஆடி 20, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 மீற்றர் வரை உயர்ந்த கடல் படுகை!

ஆனி 14, 2026
இலங்கை

24 மணிநேரத்தில் 520 சந்தேகநபர்கள் கைது!

சித்திரை 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீன பிரஜையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்!

ஆடி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube