கிளாடியேட்டர்ஸ்’ (Gladiators) திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக நடிகர் அஜித் குமார், தன்னை இரவு 1 மணியளவில் தொலைபேசியில் அழைத்து பாராட்டியதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற நேர்காணலில் இதனைத் தெரிவித்த ஜி.வி. பிரகாஷ், தனது இசையை அஜித் பாராட்டியது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அஜித்தின் பாராட்டால் அன்றிரவு தனக்கு தூக்கமே வரவில்லை என்றும் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
