திருக்கோவில் பகுதியில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் உள்ள சந்தேகநபரின் வீட்டை செவ்வாய்க்கிழமை (30) சுற்றிவளைத்து சோதனையிட்டபோது, 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
