Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

மருத்துவ அங்கீகாரம் பெறாத எடைக்குறைப்பு தடுப்பூசி சட்டவிரோத பயன்பாட்டில்

புரட்டாதி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அமெரிக்காவின் Eli Lilly மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ‘ரெடாட்ருடைட்’ (Retatrutide) என்ற புதிய எடைக் குறைப்பு ஊசி மருந்து, இதுவரை உலகின் எந்தவொரு நாட்டின் மருத்துவ ஒழுங்குமுறை ஆணையத்தாலும் மனிதப் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படவில்லை.

தற்போது மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ள இந்த மருந்தின் போலியான வடிவங்கள் ‘Reta’ என்ற பெயரில் பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த அங்கீகரிக்கப்படாத ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கண்காணிப்பு இன்றி இத்தகைய ஊசிகளைப் பயன்படுத்துபவர்கள் கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த ஊசிகளைப் பயன்படுத்திய சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், சிலர் சிறுநீரகச் செயலிழப்பு போன்ற தீவிர உடல்நலப் பிரச்சினைகளுக்கும் உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பிரித்தானிய சுகாதாரத்துறை உரிமம் இன்றி விற்பனை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ‘ரெடாட்ருடைடு’ ஊசிகளைக் கைப்பற்றியதுடன், சட்டவிரோத உற்பத்தி மையங்களையும் முடக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ரெடாட்ருடைடு மருந்து முழுமையான மருத்துவப் பரிசோதனைகளை நிறைவு செய்து, அமெரிக்காவின் FDA மற்றும் பிரித்தானியாவின் MHRA ஆகிய ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெற்று சந்தைக்கு வருவதற்கு 2027 முதல் 2028ஆம் ஆண்டு வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்படாத மற்றும் சரிபார்க்கப்படாத எடைக் குறைப்பு ஊசிகளை இணையம் அல்லது கள்ளச்சந்தை ஊடாக வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் பொதுமக்களை கடுமையாக எச்சரித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 24 மணி நேர தடுப்புக் காவல்!

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

5 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம்

ஆவணி 8, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

நவாலி தேவாலய படுகொலை: 31 ஆண்டு நினைவேந்தல்!

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அளுத்கம புகையிரத பாதையில் முச்சக்கர வண்டி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube