Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனு

#22ஆவது_திருத்தம் #திருத்தம் #மனு #நீதிமன்றம் #சட்டம் #அரசியலமைப்பு #இலங்கை #SriLanka #22ndAmendment #Constitution #CourtCase #Petition #LegalNews #SriLankaNews #BreakingNews

புரட்டாதி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமையினால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் அழைப்பாளர் துலார குணதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக்க ஆகியோரால் உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி துலார குணதிலக்க என்ற மனுதாரரால் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அந்த மனு விசாரணைக்காகத் திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவே இல்லை என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன், இந்த மனுவை விசாரித்து இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தைச் சபாநாயகருக்கு அறிவிப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இணைய மோசடிகள் குறித்து பொலிஸ் எச்சரிக்கை!

ஆடி 25, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!

ஆவணி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் மே மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு!

ஆனி 23, 2026
இலங்கை

சீன பாதுகாப்பு அதிகாரி–இலங்கை பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube