அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் New Mexico மாநிலத்தின் பெயரை “New America” என மாற்றலாம் என சமூக வலைத்தளப் பதிவில் பரிந்துரைத்துள்ளார்.
“New Mexico” என்ற பெயரில் உள்ள “Mexico” என்பதைக் கோடிட்டு, அதற்குப் பதிலாக “America” எனக் குறிப்பிடப்பட்ட மாநில வரைபடத்தையும் வெள்ளை மாளிகை மறுபதிவு செய்தது.
எனினும், மாநிலத்தின் பெயரை ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் மாற்றுவதற்கு அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் இல்லை. மேலும், New Mexico ஆளுநர் Michelle Lujan Grisham, மாநிலத்தின் பெயர் மாற்றம் குறித்து எந்த விவாதமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது டிரம்ப் சமீபத்தில் Gulf of Mexico-வை “Gulf of America” என்றும் Lake Ontario-வை “Lake America” என்றும் பெயர் மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து வந்துள்ள புதிய சர்ச்சையாகும்.
