முன்னாள் அமைச்சரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ இன்று (08) செவ்வாய்க்கிழமை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ‘எயார்பஸ்’ விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகியுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் பல மில்லியன் டொலர் இலஞ்சப் பெறுகை மற்றும் ஊழல் முறைகேடுகள் தொடர்பாகத் தொடர்புடைய நபர்களிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
