கிரிந்திவெல – நாரங்கஸ்பிட்டி பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் கடத்தப்பட்டுப் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 49 வயதுடைய பெண் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
2018 செப்டம்பர் 09 ஆம் திகதி குறித்த இராணுவச் சிப்பாய் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியிருந்தது.
இதன்போது கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிய பகுதியில் திங்கட்கிழமை (07) சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான பெண் கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிபகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் இவர் உயிரிழந்தவரின் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
