தெலுங்கானா சட்டமன்ற அமர்வுகள் இன்று(08) நடைபெற்று வரும் நிலையில், மயங்கி விழுந்த ஒருவருக்கு முதலுதவி வழங்கி உயிரை காப்பாற்றிய அமைச்சர் வகிதி ஸ்ரீஹரி தொடர்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் தமது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
மூத்த ஐஏஎஸ் (IAS )அதிகாரி நவீன் மிட்டலின் தனிச் செயலாளர் ராஜு, சட்டமன்ற வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்தபோது, அமைச்சர் வகிதி ஸ்ரீஹரி உடனடியாக சிபிஆர் (CPR) முதலுதவி வழங்கியுள்ளார்.
பின்னர் அவர் மருத்துவ ஊழியர்களை வரவழைத்து, மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் வகிதி ஸ்ரீஹரி முதலுதவி வழங்கும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.
