Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்ற 25 மாநிலங்கள்!

ஆவணி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

mjp

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதன் பின்னர், 1974 வர்த்தகச் சட்டப் பிரிவு 301-ஐ பயன்படுத்தி இந்தியா, சீனா, கனடா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 60 நாடுகளிலிருந்து இறக்குமதி பொருட்களுக்கு 10% முதல் 12.5% வரை கூடுதல் சுங்க வரி விதித்தார். இதனால் அமெரிக்கா-வெளிநாடுகள் உறவு மோசமடைந்து, இறக்குமதி குறைந்து, விலைவாசி உயர்ந்து, பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இறக்குமதி பொருட்கள் குறைவடைந்ததால், அமெரிக்காவில் பொருட்களின் விலை உச்சத்தை எட்டியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, வணிகர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

இந்த நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக நியூயோர்க், கலிபோர்னியா உள்ளிட்ட 25 அமெரிக்க மாநிலங்கள் கூட்டாகச் சேர்ந்து அமெரிக்கச் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் (US Court of International Trade) வழக்கு தொடர்ந்துள்ளன.

அமெரிக்க அதிபருக்கு வரம்பற்ற சுங்க வரிகளை விதிக்க சட்டப்படி அதிகாரம் இல்லை என்றும், இதனால் அமெரிக்க மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்து அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் மாநிலங்கள் சார்பில் முறையிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த வரிகளை உடனடியாகச் சட்டவிரோதம் என அறிவித்து தடை விதிக்க வேண்டும் எனவும், வணிகர்களிடம் இருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட வரிகளை மீண்டும் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் மாநிலங்கள் சார்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இந்த புதிய சுங்க வரிகளுக்கு இடைக்காலத் தடை (Injunction) விதிக்குமா அல்லது ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைக்கு அனுமதி அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அமெரிக்க அதிபருக்கு எதிராக மாநிலங்கள் ஒருங்கிணைந்து நீதிமன்றம் சென்றுள்ளது அமெரிக்க அதிபருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

போதைப்பொருள் கைது நடவடிக்கைக்கு இடையூறு செய்த காணொளி: ஒருவர் கைது!

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்த அரசு பயணிக்கும் பாதை சரியானதே – சி. வி. விக்னேஷ்வரன்

ஆடி 16, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

நாடளாவிய ரீதியில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் எரியூட்டி அழிக்கப்பட்டது!

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நீதி கோரி கித்துள் சந்தியில் போராட்டம்!

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube