ராகமை, பொடிவீகும்புர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (08) காலை கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
101 லீற்றரும் 250 மில்லி லீற்றரும் (சுமார் 135 போத்தல்கள்) கொண்ட சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைப்பற்றப்பட்ட மதுபானத்துடன் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ராகமை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
