மாத்தறை – அக்குரெஸ்ஸ, பலதுவ உனெல்ல சந்திப்பு அருகே இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்குரெஸ்ஸவிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் , அதே திசையில் சென்று கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தைத் தொடர்ந்து, அருகில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் ஒருவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்த நிலையில், மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
