இலங்கைக்கான புதிய சீன தூதுவர் வெய் ஹுவாஷியாங் (Wei Huaxiang) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (9) கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்றது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி நற்சான்று பத்திரங்களை கையளித்ததன் பின்னர் இலங்கைக்கான சீன தூதுவராக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகத் தொடங்கிய வெய் ஹுவாஷியாங்வுக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சாகர காரியவசமும் கலந்துகொண்டிருந்தார்.
சந்திப்பின் போது, சீன நாகரிகத்தை நெருக்கமாக அறிந்துகொள்ள உதவும் பாரம்பரிய சீன ஓவியங்கள் அடங்கிய விசேட நூல் ஒன்று தூதுவரால் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கு நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் உபாய மற்றும் இராஜதந்திர பங்காண்மை குறித்தும், சீனா இலங்கைக்கு வழங்கும் தொடர்ச்சியான ஆதரவு குறித்தும் இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார்.
