இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 82,838 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஜூலை மாதத்தில் மட்டும் 27,464 தொற்றுகள் பதிவாகி, மாதாந்திர அதிகபட்ச எண்ணிக்கையாக அமைந்துள்ளது.
சுகாதார அதிகாரிகளின் தகவலின்படி, இதுவரை 61 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் 29ஆவது வார அறிக்கையின்படி, 175 MOH பிரிவுகள் அதிக ஆபத்தான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேல் மாகாணமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 43,884 தொற்றுகள் பதிவாகியுள்ளன. கம்பஹா (17,600), கொழும்பு (16,457), கண்டி (4,847), மாத்தறை (4,728) மற்றும் களுத்துறை (4,598) மாவட்டங்களில் அதிகளவு தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
கொசு பெருகும் இடங்களை உடனடியாக அகற்றுவதுடன், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
