Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் புற்றுநோய்

புரட்டாதி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டில் வருடாந்தம் 900 தொடக்கம் 1,000 வரையிலான சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, வருடாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சிறுவர் புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சஞ்சீவ குணசேக்கர தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

செப்டம்பர் மாதம் உலகளாவிய ரீதியில் சிறுவர் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி சிறுவர் புற்றுநோய் தொடர்பான மூன்று முக்கிய விடயங்கள் குறித்து பொதுமக்களிடையே பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சிறுவர் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது அவசியமாகும். பெரியவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களை விட சிறுவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்கள் மிக வேகமாக பரவக்கூடியவை. இதனால் நோயைக் கண்டறிவது தாமதமானால் சிகிச்சையளிப்பது கடினமாவதுடன், பக்கவிளைவுகளை ஏற்படுவதுக்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

தெளிவுபடுத்த முடியாத மூன்று அறிகுறிகள் ஒரு குழந்தையிடம் காணப்பட்டாலோ, அல்லது ஒரு அறிகுறி ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்தாலோ, அல்லது ஒரு மாதத்திற்குள் நான்கு தடவைகளுக்கு மேல் ஒரே காரணத்திற்காக வைத்தியரிடம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டாலோ புற்றுநோய் தொடர்பில் பரிசோதிப்பது அவசியமாகும்.

சிறுவர்களிடையே இரத்தப் புற்றுநோயான ‘லுகேமியாவே அதிகளவில் ஏற்படுகின்றது. காய்ச்சல், நிணநீர்ச் சுரப்பிகள் வீக்கமடைதல், பல் ஈறுகளில் இரத்த கசிவு, உடற் சோர்வு, வயிறு வீக்கம் போன்றன அறிகுறிகள் தென்படக் கூடும்.

இதுதவிர மூளை, கண், எலும்பு, சிறுநீரகம் மற்றும் தசைப் பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களும் பொதுவாக சிறுவர்களிடையே ஏற்படுகின்றன.

சிறுவர் புற்றுநோயைக் குணப்படுத்தும் சாத்தியக்கூறுகள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக காணப்படுவதால், வைத்தியர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சைகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்.

நோய் அறிகுறிகள் குறைந்ததும் சிகிச்சையை இடை நிறுத்துவது ஆபத்தான விடயமாகும் ஆகையால் பெற்றோர் இது குறித்து பொருப்புணர்வோடு செயற்பட வேண்டும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 12-ஆவது முறையாக முதலிடம் பிடித்த ஜோ ரூட்!

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீண்டெழும் செலவைக் குறைத்து மூலதனச் செலவை அதிகரிக்க திட்டம்!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுவாஞ்சிகுடி நகைக்கடை ஒன்றில் நூதன திருட்டு – பெண்ணொருவர் கைது!

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

10000க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்களின் EPF, ETF நிலுவைத்தொகைகளை வழங்க அரசு நடவடிக்கை

புரட்டாதி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube