Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதியுடன் இலங்கை சாரணர் இயக்கம் கலந்துரையாடல்

புரட்டாதி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில், 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரி தொடர்பிலும், அதன் அமைப்பு முன்னெடுக்கும் பணிகளின் தற்போதைய நிலைமை மற்றும் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இதன் போது, தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ சின்னம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை சாரணர் இயக்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சாரணர் இயக்கத்தை அதிகளவிலான பாடசாலைகளுக்கு விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், அரசாங்கம் முன்னெடுத்து வரும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்களுக்கு சாரணர் இயக்கம் வழங்கக்கூடிய பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மேலும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவர் ரன்சிரி பெரேரா, இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதிப் பிரதம ஆணையாளர் (பதில்) கபில பெரேரா, செயற்குழுத் தலைவர் கமல்நாத் ஜினதாச, ஜம்போரி இணை அமைப்பாளர் ஆணையாளர் பொறியியலாளர் அமில் அபேசுந்தர உள்ளிட்ட இலங்கை சாரணர் இயக்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும்!

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி தமிழர்களுக்கு நல்லது செய்வதாக காட்டும் செயற்பாட்டை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்து விடக் கூடாது– த.சுரேஸ்.

ஆவணி 24, 2026
இலங்கை

அதிக விலைக்கு அரிசி ,குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

சித்திரை 27, 2026
இலங்கைவானிலை

பெரும்பாலான பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு!

ஆடி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube