Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐ.நா சனத்தொகை நிதியத்தின் அவசரகால நிவாரணப்பொருட்கள் சுகாதார மைச்சிடம் கையளிப்பு

புரட்டாதி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அவசரநிலைகள் மற்றும் பேரிடர்களின் போது பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் கண்ணியம் ஆகியவை பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) இன்று 250,641 அமெரிக்க டொலர் பெறுமதியான அவசரகால நிவாரணப் பொருட்களை சுகாதார அமைச்சிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தது.சமூக குழுக்களில் இணையுங்கள்

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அரசாங்கங்களின் தாராளமான ஆதரவோடு இத்திட்டம் சாத்தியமானது.

குடும்ப சுகாதார பணியகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வில், அரசு, மனிதாபிமான மற்றும் இராஜதந்திர தூதரகங்களின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இவர்களில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் (David Pine), இலங்கைக்கான ஆஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் ரூத் பெயார்ட் (Ruth Baird), சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜெயசிங்க, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி விந்தியா குமாரபெலி, குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம சிரிதுங்க, UNFPA இலங்கையின் இடைக்கால பிரதிநிதி புன்ட்சோ வங்ஷெல் (Phuntsho Wangyel) மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பிரதிநிதிகளும் அடங்குவர்.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் தீவிர வானிலை உள்ளிட்ட பேரிடர்கள் இலங்கை முழுவதும் அடிக்கடி நிகழும் சூழலில், பெண்கள் மற்றும் சிறுமிகள் தொடர்ச்சியாகப் பெருமளவு பாதிப்புககளை எதிர்கொள்கின்றனர்.பயண வழிகாட்டிகளைப் படி

உட்கட்டமைப்பு அழிவுகளுக்கு அப்பால், பேரிடர்கள் அத்தியாவசிய மகப்பேறு மருத்துவச் சேவைகளைப் பாதிப்பதுடன், அடிப்படை சுகாதாரப் பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் துண்டித்து, பாலின அடிப்படையிலான வன்முறைக்கான அபாயத்தை அதிகரிக்கின்றன.

இத்தகைய பாதிப்புகளை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில், இன்று கையளிக்கப்பட்ட அவசரகால பொருட்கள் களத்தில் உள்ள உடனடி உடலியல், மருத்துவ மற்றும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலையில் அரிசியை விற்பனை செய்த வெள்ளவத்தை பகுதி வியாபாரி ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்!

வைகாசி 5, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

புது டெல்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விபத்து

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளுக்கு நிதியுதவியுடன் கூடிய விசாரணை

புரட்டாதி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மூடப்பட்ட ரயில் நிலையங்களை மீளத் திறக்க நடவடிக்கை!

ஆடி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube