Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மூடப்பட்ட ரயில் நிலையங்களை மீளத் திறக்க நடவடிக்கை!

ஆடி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஊழியர் பற்றாக்குறையால் தற்காலிகமாக மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையத்தை, மாற்று நிலைய அதிகாரியை நியமித்து மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனவிலுந்தாவ துணை நிலையத்தில் பணியாற்றிய பிரதி நிலைய அதிகாரி பதவியை விட்டு விலகியதைத் தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை குறித்த நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, ஊழியர் பற்றாக்குறை காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த அக்குரல மற்றும் அந்தடோலா ஆகிய துணை ரயில் நிலையங்களையும், மாற்று நிலைய அதிகாரிகளை நியமித்து மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாடளாவிய ரீதியில் வெற்றிடமாக உள்ள 25 துணை நிலைய அதிகாரி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு 2025 ஆகஸ்ட் 15ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த போதிலும், இதுவரை அந்த செயற்பாடுகள் நிறைவடையவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்வு காணப்படும் – இராமலிங்கம் சந்திரசேகர்

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து – நால்வர் காயம்

ஆடி 22, 2026
இலங்கை

இலங்கையின் கறுவா துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள்: அமைச்சில் விசேட கலந்துரையாடல்!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாட்டு இலங்கையர்களுக்கு வாக்குரிமை, ஓய்வூதிய திட்டம்!

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube