Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

ரஷ்ய ஜனாதிபதிக்கு திருக்குறளை பரிசாக வழங்கிய இந்திய பிரதமர்

புரட்டாதி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

புதுடெல்லியில் நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதன்போது, தமிழ் புலவரும் தத்துவஞானியுமான திருவள்ளுவர் இயற்றிய பழமையான தமிழ் செவ்வியல் நூலான ‘திருக்குறளின்’ ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதியை, ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.

திருவள்ளுவரின் 1,330 குறட்பாக்களும் இந்த ரஷ்யப் பதிப்பில் இடம்பெற்றுள்ளன.

இந்திய அரசின் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த நூலை, நைரா எம் கர்ட்சியான் (Naira Mkrtcheyan) என்பவர் ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பரிசுகளை ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்குவது இது முதல்முறையல்ல.

முன்னதாக, 2024ஆம் ஆண்டு கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ‘சோஹ்ராய்’ (Sohrai) ஓவியத்தை அவர் விளாடிமிர் புடினுக்குப் பரிசளித்தார்.

அதேபோல, 2025ஆம் ஆண்டில் பகவத் கீதையின் ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதி, அஸ்ஸாம் தேயிலை மற்றும் வெள்ளியிலான குதிரை சிலை ஆகியவற்றை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

ஆவணி 6, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

இந்தியாவில் UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பது தொடர்பில் பரிசீலனை!

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் மேம்பட்ட சேவைகள் அறிமுகம்

ஆனி 25, 2026

ஏற்றுமதித் துறை படைத்துள்ள புதிய சாதனை!

ஆவணி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube