Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வசும பயனாளிகளின் மீள் சான்றிதழ் செப்டம்பர் 29க்குள் நிறைவுசெய்யப்படும்

புரட்டாதி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அஸ்வசும நலன்புரி நன்மை திட்டத்தின் முதலாம் கட்டத்தில் உள்ள பயனாளிகளின் மீள் சான்றிதழ் வழங்கும் பணிகளை செப்டம்பர் 29 ஆம் திகதிக்குள் நிறைவு செய்வதுடன், அஸ்வசும நலன்புரி சபையின் அங்கீகாரத்துடன் இறுதி பட்டியலை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அஸ்வசும நலன்புரி சபையின் தலைவர் நிமல் கொட்டவலகெதர தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செப்டம்பர் 29 ஆம் திகதிக்குள் இறுதி பெயர் பட்டியல் தயாரிக்கும் பணியை நிறைவு செய்து அஸ்வசும நலன்புரி சபையின் அங்கீகாரத்தை பெற்று பெயர் பட்டியலை காட்சிப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

மேலும் தகவல்கள் இணைக்கப்பட்டதும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. மறு சான்றிதழ் வழங்கும் பணியால் பயனாளிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்று மாத்திரம் கூற முடியாது.

பயனாளிகளின் எண்ணிக்கை குறைவதானது பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள அளவுகோல்களின் படியே நடைபெறுகிறது. தன்னிச்சையான நிர்வாக தீர்மானமாக அதனைக் கருதமுடியாது.

மறு சான்றுதழ் அளிக்கப்பட்ட பட்டியல் வெளியாகும் வரை உண்மையில் தகுதியான பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை குறைந்துள்ளதா என கூறுவது கடினம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பில் முறைப்பாடு

ஐப்பசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொட்டகலை ரயில் பாதை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

ஆவணி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு தொடர்பான விசேட கூட்டம் இன்று பாராளுமன்றத்தில்

வைகாசி 21, 2026
Breaking Newsஇலங்கை

மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

ஆவணி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube