மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட அமைதியின்மையைடுத்து, காயமடைந்த கைதிகள் 4 பேர் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு பல பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கேள்வியுற்றதையடுத்து மஹர சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் உறவினர்கள் சிலர் சிறைச்சாலை வளாகத்துக்கு வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
