Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

செப்டம்பர் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மட்டக்களப்பில் 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி இன்று (15) காணொளி ஊடாக தெரிவித்தார்.

குறித்த கொலைவழக்கு இன்று(15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை முன்னிலைப்படுத்தியதுடன் பிள்ளையானை காணொளி மூலம் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது சிஐடியினர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு எதிராக சமர்ப்பணம் முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து பிள்ளையான் சார்பாக முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி சௌந்தரநாயகம் பிள்ளையானுக்கு சிறையில் வழங்கும் உணவு தொடர்பாகவும், அவரது தாயார் தொலைபேசி ஊடாக உரையாடுவதற்கு கடந்த வழக்கு விசாரணையின்போது அனுமதி கோரியது தொடர்பாகவும் வாதங்களை முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து நீதவான் சிறைச்சாலை அதிகாரியை அழைத்து பிள்ளையானின் உணவு மற்றும் தாயுடன் தொலைபேசியில் உரையாடுவது தொடர்பான அறிக்கை ஒன்றை எதிர்வரும் 22ம் திகதி வழங்குமாறு உத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டதுடன், பிள்ளையான் உட்பட 3 பேரையும் தொடர்ந்து 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு லண்டனில் உள்ள சந்தேக நபரான பொலிஸ் பாயிஸ் என்றழைக்கப்படும் முகமட் பாய்ஸ் தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்தார்.

அதேவேளை லண்டனில் தலைமறைவாகியுள்ள பொலிஸ் பாயிஸ் என்பவரை கைது செய்வதற்கான கடிதம் ஒன்றை சர்வதேச பொலிஸாருக்கு அனுப்பியுள்ளதாக சிஐடியினர் தெரிவித்தனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் பலபகுதிகளில் 100mm மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்

செப்டம்பர் 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

அடுத்த 24 மணித்தியாலங்களில் அத்தனகலு ஓயா ஆற்றினை அண்டிய பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படலாம்!

மே 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காந்தி ஜெயந்தி நினைவேந்தல் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

அக்டோபர் 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்முனை பிராந்தியத்தில் டெங்குவை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

ஜூலை 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube