Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் பலபகுதிகளில் 100mm மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்

செப்டம்பர் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டின் பல பகுதிகளில் இன்று(13) 100 மில்லிமீற்றர் வரையான மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சப்ரகமுவ, மேல், வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல் மாகாணத்திலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 – 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

2027 இல் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் நிறைவு – ரணில் விக்ரமசிங்க

ஆகஸ்ட் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருகோணமயில் குறைந்த விலையில் நெல்கொள்வனவு – விவசாயிகளுக்கு நஷ்டம்

செப்டம்பர் 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊட்டச்சத்து நிலை குறைந்த 4 மாவட்டங்களில் தாய் சேய்க்கு ஊட்டச்சத்து சேவை திட்டம்!

ஆகஸ்ட் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹியங்கனையில் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 26 வயது இளைஞன் உயிரிழப்பு

செப்டம்பர் 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube