சமூக ஊடகங்கத்தில் நபிகள் தொடர்பாக பிழையானதொரு கருத்தைப் பதிவு செய்தமைக்காக சவுதியில் கைது செய்யப்பட்டு, ஐந்து வருட சிறை மற்றும் மூன்று மில்லியன் ரியால் தண்டப்பணம் என தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனுக்கான மேன்முறையீட்டு முயற்சி நேற்று (17) மேற்கொள்ளப்பட்டது.
தண்டப்பணத்தை செலுத்த முடியாத நிலையில், அனோஜனின் குடும்பத்தினர் மேன்முறையீடு செய்ய எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று (17) மாலை மேன் முறையீட்டுக்கான தீர்ப்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அனோஜனின் தண்டனையை குறைக்கும் அரசின் முயற்சிக்கு இந்த தீர்ப்பு மிகப் பெரிய இடியாக அமைந்திருக்கின்றது
