Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி இணைவு!

புரட்டாதி 18, 2026
படிக்க 4 நிமிடங்கள்

 

(கனகராஜா சரவணன்)

 

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து செயற்பட்டாரே அவ்வாறு தமிழ் மக்களின் அரசியல் ரீதியான செயற்பாட்டுக்காக புனர்வாழ்வு அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் க. இன்பராசா இணைந்து செயற்பட உள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் இன்று வியாழக்கிழமை (17) தமிழ்ழீழ விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் க. இன்பராசா ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன் இணைந்து நடாத்திய ஊடக மாநாட்டின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய தலைவர் பிரபாகரனால் ஒரு ஆயத சக்தி மௌனிக்க போகின்றது ஒரு அரசியல் சக்தியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கினார். 2009 ம் ஆண்டு யத்தம் மௌனித்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களின் மா பெரும் சக்தி என உன்னப்பாட்டில் தமிழ் மக்கள் மாத்திரம் அல்ல சர்வதேச நாடுகள் கூட அவதானித்துக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் அரசியல் தீர்வு தைப்பொங்கலுக்குவரும் தீபாவளிக்கு வரும் என காலகாலமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட உச்ச விளிம்பில் இருந்து கொண்டிருக்கின்றனர். ஈரோஸ் பார்வையளராக இருந்தோம் ஏன் என்றால் தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு ஒரு தீர்வை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.

இன்று 16 வருடம் கடந்து எந்த தீர்வும் கிடைக்கவில்லை மக்கள் வறுமையினால் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே இனி மக்களின் துன்பங்கள் கஷ்டங்களை பார்த்துக் கொண்டிருக்க முடியாது அதன் காரணமாக ஈரோஸ் வடக்கு கிழக்கு மலையகத்தில் களம் இறங்க வேண்டிய காலத்தின் கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

அதன்காரணமாக புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள். பனர்வாழ்வு அழிக்கப்பட்ட பொராளிகள் தொடர்பு கொண்டு இனைந்து செயற்படபோவதாக தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில்; புனர்வாழ்வு அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தலைமையிலாகன நிர்வாக குழுவினர் சந்தித்து பேச்சுவார்தை இடம்பெற்றது இதற்கமைய அந்த கட்சி தமிழ் மக்களின் அரசியல் ரீதியான செயற்பாட் டுக்காக ஈரோஸ் கட்சியுடன் இணைந்து செயற்பட கைகோர்த்துள்ளனர்.

எனவே ஈரோசை நம்பி வந்தவர்கள் யாரையும் கைவிடாது அத்துடன் ஈரோஸின் மறு பெயர் ஒன்றினைக்கும் சக்தி என்பதுடன் புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்,எப், ஈ.பிடி.பி, விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து போராட்ட கட்சிகளையும் ஒன்றினைந்து செயற்பட தயாராகவுள்ளது அதற்கான கதவு 24 மணித்தியாலமும் திறந்து இருக்கும்.

இதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல தலைமைத்துவத்தை உருவாக்கி பொது கட்டமைப்பை உருவாக்கி அதன் ஊடாக போராளிகளின் புனர்வாழ்வு, புனரமைப்பு, மற்றும் இருப்பிடம் வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவது முதல் நோக்கம்.

அதேநேரத்தில் இந்தியாவுக்கு ஒரு வேண்டுகோள் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களுக்கான தேவையை வெல்லவேண்டும் அவர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என ஆரம்பித்து வைத்தது இந்தியா எனவே இதற்கு மாற்று கருத்துக்கு இடமில்லை ஆரம்பித்து வைத்த இந்தியா முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.

எனவே இணைந்த வடகிழக்குள் உள்ள 13 வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இன்று மாகாணசபை முறைமை ஏற்படுத்தப் பட்டுள்ளது என்றால் எங்களுடைய உயிர்தியாகம். எனவே வடகிழக்கை ஆட்சி செய்ய வேண்டியவன் தமிழன் அதுவும் போராளிகள்

மாகாணசபை தேர்தலில் போராளிகள் போட்டியிடுவார்கள் அவர்கள் முதலமைச்சராக ஆழவேண்டும். அந்த போராளிகளை வைத்து தமிழ் மக்களை விற்று தாரைவார்த்து ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடாத்திக் கொண்டுவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இனி ஒதுங்கவேண்டும் என்றார்.

!!! புனர்வாழ்வு அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் கந்தசாமி இன்பராசா கருத்து தெரிவிக்கையில்!!!

இன்று வடக்கில் இருந்து கிழக்கில் ஈரோஸ் கட்சி தலைவர் பிரபாகரனுடன் உடன்பாட்டிற்கு வந்துள்ளோம் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான செயற்பாட்டிற்கு மலையக மக்களையும் இணைத்து பயணிப்பதற்காக வந்துள்ளோம்.

நாங்கள் சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக யுத்தம் செய்தோம் 2009 யுத்தம் மௌனித்தன் பின்னர் வடக்கு கிழக்கில் யுத்மில்லாது சத்த மில்லாது தமிழர்களின் காணிகளை சில் முஸ்லீம் அரசியல் தலைவர்களான வடக்கில் ரிசாட்பதுர்ர்தீன். கிழக்கில் ஹிஸ்புல்லா தலைமையில் அபகரிப்பு இடம்பெற்றுவருகின்றது.

யுததம் செய்த 12 ஆயிரம் போராளிகள் ஒரு 10 பேச் காணி கூட இல்லாது தத்தளித்து கொண்டிருக்கின்றனர். அவர்களை பொருளாராத ரீதியில் முன்னேற்றிக் கொண்டு செல்ல எங்கள் அரசியல்வாதிகள் தயாராக இல்லை எனவே இந்த நிலையில் கிழக்கில் இருந்து ஒரு குரல் ஒலிக்கின்றது எனவே ஈரோஸ் உடன் ஒன்றினைந்து பயணிப்பதன் அடிப்படையில் கிழக்கில் இருந்து சூரியன் உதிப்பது போல கிழக்கில் இருந்து ஒன்றினைந்த பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.

1990 ம் ஆண்டுக்கு பின்னர் வடக்கு கிழக்கில் அரோபி ஆட்சியை கொண்டு வருவதற்கான திட்டம் கிழக்கில் ஆரம்பித்து மன்னார் வரை காணி அபகரிப்பு விரிவடைந்துள்ளது எனதே தமிழ் அரசியல்வாதிகள் கண்ணை மூடி பூனை பால்குடிப்பது போல இருந்து வருகின்றனர்.

இவ்வாறு தமிழ் அரசியல்வாதிகள் 1990 ம் ஆண்டில் இருந்து இன்றுவரையும் சிங்கள அரசுக்கும் முஸ்லீம் அரசியல் வாதிகளுக்கும் முட்டுக் கொடுத்து வருகின்றனர் எனவே இவ்வாறு சத்தமில்லாது தமிழ் ஆரசியல் வாதிகளின் ஆசிர்வாதத்துடன் தமிழர்களின் பூர்வீகமான இடங்களை ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.

இதனால் தமிழ் மக்களின் காணிகளை காப்பாற்ற நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அடிப்படையில் இன்று ஈரோஸ் கட்சி தலைவர் இ.பிரபாகரனுடன் புனர்வாழ்வு அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி ஒன்றினைந்து செயற்பட உடன்பாட்டிற்கு வந்துள்ளோம் என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருள் உட்கொண்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள் 9 பேர் கைது

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்தப் புற்றுநோய் சிகிச்சையில் கடும் அழுத்தம்! சுகாதார நெருக்கடி!

வைகாசி 19, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

30க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் “ஜனநாயகன்”

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

SLS சான்றிதழ் இல்லாத சுகாதார துவாய்களுக்கு அக்டோபர் முதல் தடை!

ஆடி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube