வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (18) மத வழிபாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
