Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய அரசியலமைப்பு கட்டாயம் உருவாக்கப்படும் – ஹர்ஷன நாணயக்கார

புரட்டாதி 20, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகள் குறித்து 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும். பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டுக்கு பொருத்தமான வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக வாக்குறுதியளித்தோம். இந்த வாக்குறுதியில் எவ்வித மாற்றமும் கிடையாது. நாட்டுக்கு பொருத்தமான முரண்பாடற்ற வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து நாளை மறு தினம் (21) இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.இந்த இரண்டாண்டு காலப்பகுதியில் வெளியக தாக்கங்களுக்கு மத்தியில் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துச் செல்கிறோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகள் குறித்து 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும்.புதிய யாப்புருவாக்கத்தில் பங்குப்பற்றுவதற்கான மனநிலை மக்களுக்கு இருக்க வேண்டும்.பொருளாதார ஸ்திரத்தன்மை இதற்கு அத்தியாவசியமானது.

பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும்.அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக கொள்கைக்கு அமைய புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படும்.

சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டடுள்ளது.ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட்டவர்கள் இன்று சட்டத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.இதுவே பாரியதொரு மாற்றமாகும்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தான் மக்கள் மத்தியில் போலியான நிலைப்பாட்டை தோற்றுவித்தார்கள். நீதிபதிகளின் பதவிக் காலத்தை அதிகரிப்பதால் சட்டத்தின் ஆட்சிக்கும், நீதித்துறையின் சுயாதீனத்துக்கும் எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது.

நீதிமன்ற கட்டமைப்பு மறுசீரமைக்கப்படும் போது நிலுவையில் உள்ள வழக்குகள் துரிதமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.இதனால் எதிர்க்கட்சியில் உள்ள ஊழல்வாதிகள் பாதிக்கப்படலாம் அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர பொது பிரச்சினையல்ல.

எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கடந்த காலங்களில் மக்களுக்காக ஒன்றுப்படவில்லை. தாம் செய்த குற்றம் மற்றும் ஊழல் மோசக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது அதற்கு எதிராகவே தற்போது ஒன்றிணைந்துள்ளார்கள் என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கிளிநொச்சி A9 வீதியில் பயணித்த வாகனங்கள் பரிசோதனை!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாபய தாக்கல் செய்த ரிட் மனு: விசாரணை ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு

ஆடி 23, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

அமீர்கானுக்கு 3வது திருமணமா?

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகசின் சிறைச்சாலை மோதலில் ஒருவர் பலி!

ஆவணி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube