Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு – வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

புரட்டாதி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பிரதான ஆறுகள் மற்றும் ஓடைகளின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் களனி மற்றும் மகாவலி ஆறுகளின் மேல்நிலைப் பிடிப்புப் பகுதிகளில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவின் பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

அவரது தகவலின்படி,

மகாவலி கங்கை: நாவலப்பிட்டி பகுதியில் பெருவெள்ளப் பெருக்கு ஏற்படும் அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் நாவலப்பிட்டி, பேராதனை மற்றும் கம்பளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தீவிர விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

களனி கங்கை: நோர்வுட், கித்துல்கல மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது. இதன் காரணமாக நோர்வுட், கித்துல்கல, யட்டியாந்தோட்டை மற்றும் அவிசாவளைப் பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

களு கங்கை: இரத்தினபுரி, மில்லகந்த மற்றும் மகுரு ஓடை ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புலத்சிங்கள, பாலிந்தநுவர மற்றும் இரத்தினபுரி சுற்றுவட்டார மக்கள் இது குறித்து அவதானம் செலுத்தவேண்டும்.

நில்வலா மற்றும் கிங் கங்கை: மேல்நிலைப் பிடிப்புப் பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால் தவலம, ஹினிதும, நாகொட, அக்குரஸ்ஸ மற்றும் பிட்டபெத்தர ஆகிய பகுதிகளின் தாழ்நிலங்களில் வாழும் மக்கள் தீவிர எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்தனகலு ஓயா: நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன், மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

ஆறுகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மற்றும் குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

ஆனி 16, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இலங்கை பிரஜைகளுக்கான தாய்லாந்து இலவச வீசா இரத்து

புரட்டாதி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை விடுமுறை குறித்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

புரட்டாதி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கஞ்சிப்பானை இம்ரானின் சகா ‘வனாத்தே சது’ கைது!

ஆவணி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube