Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீட்டு மோசடி தொடர்பில் இரு பெண்கள் கைது

#வீட்டு_மோசடி #இரு_பெண்கள்_கைது #மோசடி #கைது #காவல்துறை #இலங்கை_செய்திகள் #Fraud #Arrest #SriLankaNews #BreakingNews

புரட்டாதி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மிரிஹான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பாரிய வீட்டு மோசடி சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 மற்றும் 31 வயதுடைய குறித்த இரு பெண்களும் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலகு தவணைக் கட்டண முறையின் கீழ் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக பொதுமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, வாக்குறுதியளித்த வீடுகளை நிர்மாணிக்காமல் மோசடி செய்ததாகக் கூறப்படும் தனியார் நிறுவனத்துக்கு உதவியதாகவும், உடந்தையாகச் செயற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் குறித்த நிறுவனத்தில் பிரதான விற்பனை முகாமையாளராகவும் செயற்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளனர்.

குறித்த நிறுவனத்துக்கு எதிராக இதுவரை 245 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து பெருமளவு பணத்தை நிறுவனம் பெற்றுக்கொண்ட போதிலும், வாக்குறுதியளித்தபடி வீடுகளை நிர்மாணிக்கவில்லை என முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின்போது சந்தேகநபர்களுக்குச் சொந்தமான நான்கு கார்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வழக்கில் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் கடந்த ஜூலை 28ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர் எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இரு பெண்களும் நேற்று வெள்ளிக்கிழமை நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

தாய்லாந்தில் கன மழை – வெள்ளத்தில் மூழ்கியது பேங்கொக்

புரட்டாதி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத யாத்திரை தடை எனும் செய்தி பொய்: அமைச்சு மறுப்பு!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலைக்குள் நாமல் ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

புரட்டாதி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு பிரதேச செயலகங்களில் இன்று முதல் கார்டு கட்டண வசதி!

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube