Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நான்கு மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

புரட்டாதி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நான்கு மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அலுபோமுல்லை பொலிஸார் தெரிவித்தனர்.

வண்டுரமுல்லை சேசத மாவத்தையைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சேசத மாவத்தையின் ஊடாக குறித்த நபர் சென்றுக் கொண்டிருந்த போது பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன்போது அவரிடமிருந்து 15 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அலுமாரியில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 190கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பாணந்துறை ‘குடு நிலங்க’ குழுவுடன் தொடர்புடைய கும்பலால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது இவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக இதற்கு முன்னரும் 7 தடவைகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள இவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகள் விசாரணைகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மாணவர்களுக்கு கஞ்சா கலந்த போதைப்பொருள் விற்பனை: இளைஞர் கைது!

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு வாகனேரியில் யானை தாக்குதலில் 60 வயது விவசாயி உயிரிழப்பு – மக்கள் யானை வேலி அமைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

புரட்டாதி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆறு தமிழ் கட்சிகள் குழுவில் எனக்கு தெரிந்தே எமது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் – சீ. வீ. கே சிவஞானம்

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கி போராட்டம்!

ஆவணி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube