மாற்றுத்திறனாளிகள் சாரதி அனுமதிப்பத்திரம் பெறும் நடைமுறையை எளிதாக்க, மருத்துவப் பரிசோதனைகளை மாவட்ட மட்டத்தில் நடத்தவும், வாகனங்களைத் தேவைக்கேற்ப மாற்றியமைக்கவும் நாடாளுமன்றக் குழு முன்மொழிந்துள்ளது.
பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான அனுமதிப்பத்திரத் தகுதிகளை விரிவுபடுத்துதல், சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்களை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தையும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தையும் இணைக்கும் டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்தி, நிர்வாகத் தடைகளை குறைக்கவும் குழு வலியுறுத்தியுள்ளது.
