Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

புரட்டாதி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகள் ஊடாக கரையை கடந்து வருகின்றது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நேரடித் தாக்கம் இலங்கைக்கு இல்லை என்றபோதிலும், அமைப்பை நோக்கி வீசும் காற்று ஓட்டம் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போதைய மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவிளையாட்டு

“கிரிக்கெட் பேட்டிங் விளையாட்டு” – விளையாட்டுத்துறை அமைச்சர்!

ஆவணி 7, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இலங்கை பிரஜைகளுக்கான தாய்லாந்து இலவச வீசா இரத்து

புரட்டாதி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலன்னறுவையில் புதையல் தோண்ட முயன்ற ஒருவர் கைது

புரட்டாதி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியை விட மிகப்பெரிய மனிதப் புதைகுழி வட்டுவாகால் விகாரைக்குக் கீழே உள்ளது – துரைராசா ரவிகரன்

ஆனி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube