அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உருவப்படம் அடங்கிய சிறப்பு கடவுச்சீட்டுகளை வெளியிட அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த கடவுச்சீட்டுகளில் ட்ரம்ப்பின் உருவப்படம், அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் வரிகள் மற்றும் அமெரிக்க தேசியக் கொடி ஆகியவை இடம்பெற்றுள்ளதுடன் ட்ரம்ப்பின் கையொப்பம் தங்க நிறத்தில் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பதிப்பு கடவுச்சீட்டுகளை வொஷிங்டன் கடவுசீட்டு முகவரகத்தில் ((Washington Passport Agency)) மட்டுமே கிடைக்கும் என்றும், விண்ணப்பிக்கும் எந்தவொரு அமெரிக்க குடிமகனும் இதனைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி , ட்ரம்ப்பின் உருவம் பொறித்த சிறப்பு தங்க நாணயங்களை வெளியிட அமெரிக்க மின்ட் ((US Mint) திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க காகிதப் பணத்தாள்களில் கையெழுத்திடும் முதல் பதவியில் இருக்கும் ஜனாதிபதி என்ற பெருமையை ட்ரம்ப் பெறவுள்ளார்.
புகழ்பெற்ற கென்னடி கலை மையம், ‘ட்ரம்ப்-கென்னடி மையம்’ என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. வொஷிங்டன் டிசியில் 250 அடி உயரத்தில் ‘ஆர்க் டி ட்ரம்ப்'(Arc de Trump) என்ற பிரம்மாண்ட வெற்றி வளைவு அமைக்கப்படவுள்ளது.
