Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிமன்றத்துக்குள் மோதிக்கொண்ட ‘படோவிட்ட அஸங்க’ மற்றும் ‘கொஸ் மல்லி’ ஆகியோரின் சகாக்கள்

புரட்டாதி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்திற்குள் பிரபல பாதாள உலகத் தலைவர்களான ‘படோவிட்ட அஸங்க’ மற்றும் ‘கொஸ் மல்லி’ ஆகியோரின் சகாக்களுக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் ‘படோவிட்ட அஸங்க’ குழுவைச் சேர்ந்த கருணாலுகே ஸ்ரீநாத் பிரியஷாந்த மற்றும் கொஸ் மல்லி குழுவைச் சேர்ந்த மதுஷ்க ரேணுக பெர்ணான்டோ ஆகிய இருவரும் நேற்று வியாழக்கிழமை (24) நீதிமன்ற கூண்டுக்கு அருகில் மோதிக் கொண்டுள்ளனர்.

கடந்த 2025 நவம்பர் மாதம் கல்கிஸ்ஸை சிறிபால வீதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிதாரர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுனராக செயற்பட்டவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஸ்ரீநாத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தெஹிவளை சிரிசங்கபோ வீதியில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டு இரண்டு சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் மதுஷ்க கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்குகளின் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக இரண்டு சந்தேகநபர்களும் கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இதன்போது ஸ்ரீநாத் நீதிமன்ற கூண்டுக்குள் இருந்த நிலையில் மதுஷ்க அடுத்த வழக்கு விசாரணைக்காக அருகில் அமரவைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது கூண்டிலிருந்து வெளியேறிய ஸ்ரீநாத் மதுஷ்கவை நோக்கிச் சென்று தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார். உடனே சிறைச்சாலை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவித்த கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனிடையே குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் தனித்தனியாக சிறைக்காவலில் வைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கல்கிஸ்ஸை மேலதிக நீதவான் ஹேமாலி ஹல்பந்தெனிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொக்கெய்ன் போதைப்பொருள் மாத்திரைகளுடன் அங்கோலா நாட்டு பெண் ஒருவர் கைது!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்த ஆண்டில் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். காணாமல் போயிருந்த பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் பிரபாத் அநுராத தயாரத்னவின் சடலம் பொலிஸாரால் இன்று (24) முற்பகல் மீட்கப்பட்டது. இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பதுளை – மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டைக்கு அருகிலுள்ள அடர்ந்த புதர் பகுதியில் வைத்து இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியரான பிரபாத் அநுராத தயாரத்ன நேற்று (23) முற்பகலில் இருந்து காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன் பலனாக, வைத்தியரின் கார் பதுளை – மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து நேற்றிரவு (23) கண்டெடுக்கப்பட்டது. இதற்கமைய, காணாமல் போன வைத்தியரைத் தேடும் நோக்கில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அப்பகுதியில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்தனர். இதன்போது, காணாமல் போன வைத்தியரின் சடலம் அப்பகுதியிலுள்ள அடர்ந்த புதருக்குள் சுமார் 800 மீற்றர் உட்புறமாக அமைந்திருந்த பாறையொன்றின் மீது கிடந்த நிலையில் இன்று (24) காலை கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து 3 வகையான மருந்துகளையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். இதற்கமைய, அந்த மாத்திரைகளை உட்கொண்டு வைத்தியர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன், அவர் நீண்டகாலமாக மன அழுத்தத்திற்காக மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளமையும் பொலிஸாரால் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆவணி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறை பகுதியில் வீடொன்றில் தீ பரவல்

புரட்டாதி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube