Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் குறைவடையும்

புரட்டாதி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் படிப்படியாக குறைவடையும் என வளிமண்டவிலயல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் அவ்வப்போது சுமார் 75 மி.மீ வரையான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதனால் தொடர்ந்தும் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்படையினருக்கும், மீனவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தொடரும் மழையின் காரணமாக களு கங்கை, ஜின்கங்கை மற்றும் நில்வள கங்கை போன்ற பிரதான நதிகள் தொடர்ந்தும் சிறு வெள்ள மட்டத்திலேயே காணப்படுவதுடன், களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கை பெருக்கெடுத்தமையால் பத்தேகம பகுதியில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிகரித்து வரும் நீரின் அளவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகப் பொல்கொல்ல அணையின் மூன்று வான் கதவுகள் 33 அங்குல அளவுக்குத் திறக்கப்பட்டு நீரும் விக்டோரியா நீர்தேக்கத்திற்கு வெளியேற்றப்பட்டு வருவதுடன், மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அனுர அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும் : ஈரோஸ் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன்

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இஷாரா செவ்வந்தி 30 நாட்கள் தடுப்புக் காவல்

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் அங்ககேவுக்கு பிணை

புரட்டாதி 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மனச்சோர்வுக்கு புதிய Brain Stimulation Headset

புரட்டாதி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube