விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடமிருந்து இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
‘கிரிஷ்’நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவிடமிருந்து 70 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை , எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
