சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளியான சிவராசா அனோஜனின் தண்டனையை உடனடியாக இரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) சவூதி அரேபிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அனோஜனின் விடுதலைக்காக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபையும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, சவூதி அதிகாரிகள் மரண தண்டனையை நிறுத்தி, குறித்த இலங்கைப் பிரஜைக்கு நியாயமான சட்ட நடவடிக்கைக்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அனோஜனின் வழக்கு தொடர்பில் தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தக் கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
